விழுப்புரம் அருகே உள்ள சிறுமதுரை என்ற கிராமத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர்களான கலியபெருமாள், முருகன் ஆகிய இருவரும் ஜெயஸ்ரீ என்ற சிறுமியின் கை கால்களைக் கட்டி, தீ வைத்து எரித்துக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொலை செய்தவர்களை என்கவுன்டர் செய்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு! - one Lakh reward who encounter the two accused
மதுரை: சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொலை செய்தவர்களை என்கவுன்டர் செய்யும் காவலருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அறிவித்துள்ளார்.
வழக்கறிஞர் மகாராஜன்
இந்நிலையில், மதுரை மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் என்ற வழக்கறிஞர் பேஸ்புக் மூலமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி குழந்தையை எரித்துக் கொலை செய்தவர்களை என்கவுன்டர் செய்யும் காவலருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!