மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் முயற்சியில் ஏப்ரல் 2 முதல் 11 வரை மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. அப்போட்டிக்கு 12,000க்கும் அதிகமான மாணவர்கள் தங்களின் படைப்புகளை அனுப்பியிருந்தனர். இப்படைப்புகளிலிருந்து பல்வேறு பிரிவுகளில் தினந்தோறும் 120 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ. 250 வழங்கப்பட்டது. இதுவரை, ஏறத்தாழ 1,200 பேர் வரை பரிசு பெற்றுள்ளனர்.
கடந்த 10 தினங்களில் தேர்வான படைப்புகளிலிருந்து 14 படைப்புகள் மிகச் சிறந்தவை எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஓவியத்தில் மட்டும் ஏராளமான படைப்புகள் வந்த காரணத்தினாலும், ஏதேனும் இரண்டை மட்டும் தேர்வு செய்வது இயலாத காரணத்தினாலும் நான்கு படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ. 5000 வழங்கப்படுகின்றது. மற்ற எல்லா படைப்புகளுக்கும் தலா ரூ.10,000 வழங்கப்படுகின்றது. இந்தப் போட்டியில் தேர்வு பெற்றவர்களின் விபரத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவர்களின் விபரங்கள் பின் வருமாறு:
ஓவியப்போட்டியில் எஸ். ஆகாஷ்குமார் (5ஆம் வகுப்பு, ஸ்ரீஅரபிந்தோ மீரா மெட்ரிகுலேசன்), ஜெ. ஜெனிட்டா ராணி (6ஆம் வகுப்பு, செயின்ட் ஜான் மெட்ரிகுலேசன்), டி. சந்தோஷ் (8ஆம் வகுப்பு, தியாகராஜர் மாதிரி மேல்நிலைப்பள்ளி), ஆர். விஜய் கணேஷ் (10ஆம் வகுப்பு, திரு.வி.க மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி), நகைச்சுவைப் போட்டியில், அரவிந்த் ராஜ் (7ஆம் வகுப்பு, லட்சுமி பள்ளி), தமிழ் கவிதைப்போட்டியில் அபுபக்கர் சித்திக் (11ஆம் வகுப்பு, தியாகராஜர் மாதிரி மேல்நிலைப்பள்ளி), ஆங்கில கவிதைப் போட்டியில் ரியா என்ற சூரிய சங்கரி (12ஆம் வகுப்பு, வேலம்மாள் வித்யாலயா), குறும்படப் போட்டியில் விஷ்வேஷ் கண்ணா (11ஆம் வகுப்பு, தியாகராஜர் மாதிரி மேல்நிலைப்பள்ளி), தமிழ் கதை போட்டியில் அபுபக்கர் சித்திக் (11ஆம் வகுப்பு, தியாகராஜர் மாதிரி மேல்நிலைப்பள்ளி), ரோட்ஸ் ஷைனி (9ஆம் வகுப்பு, செயின்ட் ஜான் மெட்ரிகுலேசன்), டி.கே.சங்கமித்ரா (5ஆம் வகுப்பு, எஸ்பிஓஏ சிபிஎஸ்ஈ பள்ளி), ஆங்கில கதைப் போட்டியில் பாலா வெற்றிவேல் (12ஆம் வகுப்பு, கேந்திரிய வித்யாலயா, திருப்பரங்குன்றம்), என்.எஸ். அரவிந்த்ராஜ் (7ஆம் வகுப்பு, லட்சமி பள்ளி), வி. சாய் சர்வேஷ் (3ஆம் வகுப்பு, இதயம் ராஜேந்திரன் பள்ளி).
வெற்றியாளர்களின் பெயர்கள்
வெற்றி பெற்றவர்கள் அனைவருக்குமான மொத்த பரிசுத் தொகை ரூபாய் ஐந்து லட்சத்தை அபராஜிதா நிறுவனம் வழங்குகிறது.
இதையும் படிங்க...'களைக்கட்டட்டும் வீடு கற்பனைத் திறத்தோடு' - மதுரை எம்பியின் ஏற்பாட்டில் கலை இலக்கியப் போட்டிகள்!