தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட வருவாய் ஆய்வாளர் - வருவாய் ஆய்வாளர்

மதுரை: வீட்டு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ற வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

வருவாய் ஆய்வாளர் கைது
வருவாய் ஆய்வாளர் கைது

By

Published : Oct 6, 2020, 10:50 PM IST

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தன்னுடைய மனைவி பெயரில் உள்ள வீட்டின் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்காக மதுரை மாநகராட்சி 31ஆவது வார்டு வருவாய் ஆய்வாளரிடம் விண்ணப்பித்துள்ளார்.

இந்த நிலையில் பெயர் மாற்றம் செய்து தருவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக செந்தில்குமார் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து ரசாயனம் கலந்த பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் செந்தில்குமாரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அதனை மாவட்ட நீதிமன்றம் அருகே லஞ்ச பணத்தை வாங்க வந்த வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணனை சுற்றி வளைத்து கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details