தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே வீட்டிற்குள் மூன்று கட்டு விரியன் பாம்புகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை - கட்டு விரியன் பாம்புகளை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்

மதுரை: ஒரே வீட்டிற்குள் இருந்த மூன்று கட்டு விரியன் பாம்புகளை தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

venom
venom

By

Published : Apr 20, 2021, 6:52 PM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கவனம்பட்டி கிராமத்தில் வசித்து வருவர் சத்தியமூர்த்தி. இவர் போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்குள் பாம்பு இருப்பதாக உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

பாம்புகளை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

அதன்பேரில் உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய தலைமை அலுவலர் சுந்தரம் தலைமையில், தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த வீட்டுக்குள் அதிக விஷத்தன்மை வாய்ந்த மூன்று கட்டு விரியன் பாம்புகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட 3 பாம்புகளும் உசிலம்பட்டி வனக்காவலர் ஆறுமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details