மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சியில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், மொத்தம் 1,808 வாக்குகள் பதிவாகின. ஆறு வேட்பாளர்களுடன் போட்டியிட்ட 79 வயதான வீரம்மாள் 250 வாக்குகள் பெற்று 199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றிபெற்ற வீரம்மாள் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரேத்யேக பேட்டியில், "எனது ஊர் மக்களுக்கு குடிநீர், மின்சாரம், சாக்கடை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். அதனைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். என்னைப் பொறுத்தவரை வயது ஒரு தடை இல்லை. எந்த நேரத்திலும் ஊரின் நலனுக்காக அலுவலர்களைச் சந்தித்து நல்லது செய்ய எப்போதும் முயற்சி மேற்கொள்வேன்" என்றார்.