பாஜகவினர் திருமாவளவனைக் கண்டித்து இன்று போராட்டம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்புப் போராட்டமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று போராட்டத்தை அறிவித்திருந்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டிருந்த பாஜகவினரை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டப் பொறுப்பாளர் பாண்டியம்மாள் தலைமையில் அக்கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.
அச்சமயம் பாஜக கொடியுடன் கார் ஒன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே சென்றது. அதனை வழிமறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், காரினை தாக்க முற்பட்டனர்.