தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மனிதனை கடவுள் காப்பாற்றிய காலம்போய் கடவுளை மனிதன் காப்பாற்றுகிறான்!' - வைரமுத்து பாடல்கள்

மதுரை: மனிதனை கடவுள் காப்பாற்றிய காலம்போய், இப்போது கடவுளை மனிதன் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான் என்று கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.

vairamuthu

By

Published : Aug 11, 2019, 11:27 AM IST

மதுரை மருத்துவக்கல்லூரி வளாக அரங்கத்தில் கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், கவிப்பேரரசு வைரமுத்து, கம்பம் செல்வேந்திரன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருமலை ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது வைரமுத்து பேசுகையில், 'உங்களால் எழுதுகிறேன்; உங்களுக்காக எழுகிறேன்' இன்றைய சமுதாயத்திற்கு மட்டுமல்ல நாளைய சமுதாயத்திற்கும் சேர்த்தே எழுதுகிறேன் என்றார்.

கருணாநிதி இல்லாத நேரத்தில்...

  • தன் தமிழ் எழுத்தை யார் போற்றுவார்கள்?
  • யார் தன் எழுத்தை கவுரவிப்பார்கள்?
  • யார் தன் தமிழ் எழுத்தை சுட்டிக்காட்டுவார்கள்?
  • யார் தன் எழுத்தை வாசித்து பெருமைப்படுத்துவார்கள்?

என்று துயில் கொள்ளாமல் இருந்ததாக, தனது எழுத்தின் மீதான கருணாநிதியின் காதலை வைரமுத்து கேள்விகளால் வெளிப்படுத்தினார்.

மதுரையில் இத்தனை கலைஞர்கள் தமிழாற்றுப்படையை வரவேற்று பேசும்போதும், கைதட்டி உற்சாகப்படுத்தும்போதும் தமிழ் கலைஞர்கள் வடிவில் கருணாநிதி இருப்பதை உணர்வதாக அவர் சிலாகித்துப் பேசினார்.

தமிழாற்றுப்படை பரிசு பெறுமா, பொன்னாடை வருமா, பிரதிகள் தாண்டுமா, விருது பெறுமா என்று நினைத்து எழுதவில்லை எனக் குறிப்பிட்ட வைரமுத்து, எந்த நாடாளுமன்றத்தை விட இந்த நாடாளுமன்றத்தில்தான் தமிழ் மீதும், தமிழ் மண்மீதும் பாசம் கொண்டவர்களை அதிகமாக அனுப்பியுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். மசோதா கூட தோற்கலாம்; இந்த மண்ணின் மணம் தோற்காது என்றார்.

'தமிழ் தமிழ்' என்று ஏன் பேசுகிறீர்கள் என்று சிலர் அறியாமையில் கேட்பதாக சொன்ன வைரமுத்து, அறம் சார்ந்த வாழ்க்கைக்கு தமிழ் அவசியம் என்பதை எடுத்துரைத்தார். அறம் எங்கு உள்ளதோ அங்கு தமிழ் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மனிதனை கடவுள் காப்பாற்றிய காலம்போய், கடவுளை மனிதன் காப்பாற்றியுள்ளான்; கவிஞன் காப்பாற்றியுள்ளான் என்று பேசி அரங்கை அதிரவைத்தார்.

கவிஞர் வைரமுத்து பேச்சு

கம்பன் ராமனை ராமாயணத்தில் காப்பாற்றியுள்ளதாக கூறிய அவர், அதற்கு ஆதாரம் தான் வைத்துள்ளதாகவும் அதிரடியாக தெரிவித்தார். அதை எழுதுவதற்கு தான் மிகுந்த சிரமப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

ABOUT THE AUTHOR

...view details