தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரிகாலனின் கல்லணையைவிட வலுவானது முல்லைப்பெரியாறு அணை - வைகோ - முல்லைப் பெரியாறு அணை

கரிகாலன் கட்டிய கல்லணையைவிட முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. இந்த விஷயத்தில் கேரள அரசின் திட்டம் எடுபடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Vaiko
Vaiko

By

Published : Nov 5, 2021, 7:31 PM IST

மதுரை:மதுரை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 'எட்டு ஆண்டுகள் முல்லைப் பெரியாறு அணைக்காக நானும் அப்பாஸ் அவர்களும் 678 கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டு 10 லட்சம் மக்களைத் திரட்டி, கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் திட்டத்தை முறியடித்தோம்.

செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ

கேரள அரசு தொடக்கத்தில் இருந்தே இந்த அணையை உடைக்க வேண்டும் எனத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணை, கரிகாலன் கட்டிய கல்லணையை விட வலுவாக உள்ளது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அணை வலுவாகத் தான் இருக்கும். எனவே, கேரள அரசின் திட்டம் எடுபடாது.

தமிழ்நாடு அரசு 7 பேர் விடுதலை குறித்து பழைய ஆளுநருக்கு கடிதம் எழுதியதை, அவர் குப்பையில் போட்டுள்ளார். தற்போது புதிய ஆளுநரிடம் முயற்சி செய்து வருகிறோம். முயற்சி எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: ’முல்லைப் பெரியாறு தென் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நீர்’ - வைகோ

ABOUT THE AUTHOR

...view details