மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ செய்தியாளர்களிடம், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து பெரும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கோலமிடுவது அடிப்படை உரிமை.
அறவழியில் கோலமிட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டிய அப்பெண்களை சாஸ்திரி நகர் காவல் துறையினர் தரக்குறைவாகப் பேசி மிரட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் பாசிச அடக்குமுறை. எனவே அப்பெண்களை விடுதலை செய்து, கைது செய்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.
மதுரை விமான நிலையத்தில் வைகோ மேலும் பேசிய அவர், "இரண்டு நாள்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஜெகதாபட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 13 படகுகள் பறிமுதல்செய்யப்பட்டிருக்கின்றன. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு மீனவர்களை இந்தியக் குடிமகனாகவே நினைக்கும் மனோபாவம் மத்திய அரசிடம் இல்லை. தமிழ்நாடு மீனவர்களை விரோதியாக கருதுவதுபோல் நரேந்திர மோடி அரசு செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது" என்றார்.
இதையும் படிங்க: ‘கோலம் போட்டது ஒரு குற்றமா’ - இளைஞர்களைக் கைது செய்த காவல் துறை, ஸ்டாலின் கண்டனம்!