மதுரை:மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா கிழக்கு ராஜ கோபுரம் எதிரே இருக்கக்கூடிய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதுமண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி நேற்று (ஜூன் 3) நடந்தது. புதுமண்டபத்தில் மூன்று முறை மீனாட்சி அம்மனும், சுவாமியும் பிரியாவிடை அம்மனுடன் எழுந்தருளி வலம் வந்து அதன் பின் மைய மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அதனைத் தொடர்ந்து விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் சித்திரை வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பிறகு மீண்டும் கோயிலுக்குச் சென்றனர்.