தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ஆதாரில் இந்தியாவில் உலாவிய வெளிநாட்டுப் பெண்: மடக்கிப்பிடித்த மதுரை காவல் துறை!

மதுரை: சுற்றுலா விசா (நுழைவு இசைவு) காலம் முடிந்தும் இந்தியாவிலேயே தங்கிருந்து உலாவிவந்த உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்ணை மதுரை காவல் துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

uzbekistan girl
uzbekistan girl

By

Published : Mar 2, 2020, 1:34 PM IST

மதுரையில் மேல பெருமாள் மேஸ்திரி தெருவில் உள்ள நட்சத்திர விடுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சட்டத்துக்குப்புறமாகத் தங்கியிருப்பதாக மதுரை மாநகர ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் உத்தரவின்பேரில், ஆய்வாளர் ஹேமா மாலா தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் விடுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அதில், டெல்லியைச் சேர்ந்த பெண் தங்கியிருப்பதாக ஆவணங்கள் கிடைத்தன. இதையடுத்து, அப்பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த நைமோவா ஜெரினா (22) என்பதும், சுற்றுலா நுழைவு இசைவில் இந்தியா வந்த நிலையில் நுழைவு இசைவு காலம் முடிந்தும் நாடு திரும்பாமல் டெல்லி முகவரியில் போலியாக ஆதார் அட்டை தயாரித்து இந்தியா முழுவதும் சுற்றிவந்துள்ளது தெரியவந்தது.

போலி ஆதாரில் இந்தியாவில் உலாவிய வெளிநாட்டுப் பெண் கைது

மேலும், வெளியுறவுத் துறை அமைச்சகமும், தமிழ்நாடு காவல் துறை இயக்குநரின் அறிவுரையின்பேரில் அந்த இளம்பெண் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர் உளவு பார்ப்பதற்காக இந்தியா வந்தாரா? அல்லது எந்தக் காரணத்திற்காக வந்துள்ளார்? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:'நாலு வருஷ ஆசை' - கல்லூரி மாணவிக்கு டேட்டிங் ரெஸ்யூம்... விளையாட்டா சொன்னதற்காக இப்படியா!

ABOUT THE AUTHOR

...view details