மதுரை மாவட்டம்,உசிலம்பட்டியைச் சேர்ந்த சாம் டேவிட் லிவிங்ஸ்டன், இங்கிலாந்தில் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வருகிறார். இவர் இங்கிலாந்தின் ப்ரஸ்டன் பகுதியைச் சேர்ந்த சாரா எலிசபெத் என்பவரைக் காதலித்து, கடந்த ஆண்டு மே 21ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.
கரோனா காரணமாக தமிழ்நாடு வரமுடியாமல் தவித்து வந்த இத்தம்பதியினர், தமிழ்நாடு திரும்பிய உடன் ஏ.ஜி. தேவாலயத்தில், வரவேற்பு நடைபெற்றது. இவ்விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும், மரக்கன்றுகளை வழங்கிய மணமக்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரிக்கை விடுத்தனர்.