தமிழ்நாடு

tamil nadu

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வழக்குகள் சென்னை அமர்வுக்கு மாற்றம்

By

Published : Feb 15, 2022, 6:04 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும், சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வழக்குகள் சென்னை அமர்வுக்கு மாற்றம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வழக்குகள் சென்னை அமர்வுக்கு மாற்றம்

மதுரை:தமிழ்நாடு முழுவதும் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்புமனு நிராகரிப்பு, வேட்பாளர்கள் தகுதி நீக்கம், தேர்தல் சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாகப் பல்வேறு வேட்பாளர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இன்று (பிப்ரவரி 15) விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்வாக ரீதியான உத்தரவின் அடிப்படையில், தேர்தல் சம்பந்தமான அனைத்து வழக்குகளும் சென்னை முதன்மை அமர்விற்கு மாற்றப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஸ்டாலினுக்கு தொல்லை கொடுக்கும் பாஜக - நாராயணசாமி குற்றச்சாட்டு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details