மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் சிங். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத அங்காடி நடத்திவருகிறார்.
சில நாள்களுக்கு முன்னதாக பதஞ்சலி நிறுவனத்திலிருந்து பேசுவதாக பஞ்கிராஜ் அட்சயா என்பவர் அர்ஜுன் சிங்கைத் தொடர்புகொண்டு ரூ.17 லட்சம் வங்கியில் செலுத்துமாறு கூறியுள்ளார். இதையடுத்து அர்ஜுன் சிங் வங்கியில் ரூ.17 லட்சத்தைக் கட்டினார்.
ஆனால் வங்கியில் பணம் கட்டப்பட்டு, பல மாதங்கள் கடந்தும் சரக்கு வராததால், அர்ஜுன் சிங் சந்தேகமடைந்தார். பின்னர் பதஞ்சலி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு நடந்ததைக் கூறி விசாரித்தபோது, தான் ஏமாற்றமடைந்தது அர்ஜுன் சிங்கிற்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து எஸ்.எஸ். காலனி காவல் துறையினரிடம் அர்ஜுன் சிங் புகாரளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நூதன மோசடியில் ஈடுபட்ட நபரைத் தேடிவருகின்றனர்.
பதஞ்சலி நிறுவனப் பெயரை வைத்து ரூ. 17 லட்சம் மோசடி இதையும் படிங்க: சிறார் ஆபாசப்படம் பகிர்வோர் - தயாரான இரண்டாவது பட்டியல்!