தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை ஆதினம் மறைவுக்கு எல்.முருகன் இரங்கல் - அருணகிரிநாதர் மறைவு

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மதுரை ஆதினம் மறைவுக்கு மத்திய அமைச்சர் இரங்கல்
மதுரை ஆதினம் மறைவுக்கு மத்திய அமைச்சர் இரங்கல்

By

Published : Aug 14, 2021, 6:39 PM IST

மதுரை: மதுரை ஆதீனம் 292ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது (77). கடந்த 9ஆம் தேதி இரவு ஆதீனம் அருணகிரிநாதர், வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் உடனடியாக மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போனது.

மறைவு செய்தி அறிந்து துயரம்

இந்நிலையில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் மறைவுக்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக 40 ஆண்டுகளாக தொண்டாற்றிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு செய்தி அறிந்து துயரமடைந்தேன்.

மதுரை ஆதீனத்தின் 292ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர், இவர் 1980ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இந்த ஆதீனத்தின் மடாதிபதியாக பொறுப்பில் இருந்தவர். பல கோவில்களின் குடமுழுக்கு விழாக்களை முன்னின்று சிறப்பாக நடத்திய பெருமை இவருக்கு உண்டு.

ஈடு செய்ய முடியாத இழப்பு

ஏராளமான பள்ளி, கல்லூரி, கோவில் நிகழ்ச்சிகளில் இவர் சொற்பொழிவாற்றி உள்ளார். மறைந்த மடாதிபதி அருணகிரிநாதர் அவர்கள் பூர்வாசிரமத்தில் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார். ஆன்மிக உலகின் முது பெரும் மடாதிபதி அருணகிரிநாதரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கும், ஆதீனத்தின் பொறுப்பாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:எம்மதமும் சம்மதம்- அருணகிரி நாதர் மாஸ் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details