தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதியை பாராட்டிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ - செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சராக இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்

விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி சிறப்பாக செயல்படுவார் - செல்லூர் ராஜு
விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி சிறப்பாக செயல்படுவார் - செல்லூர் ராஜு

By

Published : Jan 3, 2023, 12:28 PM IST

Updated : Jan 3, 2023, 12:51 PM IST

விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி சிறப்பாக செயல்படுவார் - செல்லூர் ராஜு

மதுரை: சர்வதேச அளவில் நடைபெறவுள்ள ஜூனியர் கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்வதற்காக இந்திய விளையாட்டு வீரர்களை அமெச்சூர் கபடிக் குழு சார்பாக தேர்வு செய்யும் கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மதுரையில் இந்த கபடி போட்டி நடைபெறுவது பெரும் மகிழ்ச்சி. அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் 252 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள் பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி ஈரானில் நடைபெறும் உலக கபடி போட்டியில் விளையாட உள்ளனர்.

இந்தியா சார்பில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, 12 நபர்கள் விளையாட செல்வார்கள். இதில் தமிழர் ஒருவரும் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெறும் இந்த தேர்வு போட்டிக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.

மேலும், அமெச்சூர் கபடிக் குழுவிற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு அரசும் விளையாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமையிலான அதிமுக அரசும் பல்வேறு வகையில் விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் கூடுதலாக இட ஒதுக்கீடும் வழங்கினர்.

தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசு விளையாட்டுத்துறையின் அமைச்சராக இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. இதனால் விளையாட்டுத் துறைக்கு நிறைய செய்வார். கூடுதலாக விளையாட்டு ஸ்டேடியங்கள் வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். செய்தியின் வாயிலாக விளையாட்டுத் துறை அமைச்சர் கவனத்திற்கு நீங்கள் கொண்டு செல்லுங்கள்" என செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ஆட்சியில் இருந்து வெளியேறுகிறாரா பிடிஆர்? பரபரப்பினை ஏற்படுத்திய ட்விட்டர் பதிவு

Last Updated : Jan 3, 2023, 12:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details