மதுரை: ஆனையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலையினை திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (மார்ச் 19) திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைக்க வேண்டும் என மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில், 8 1/4 அடி உயரத்துக்கு வெங்கலச் சிலை திறக்கப்பட்டது.
இதையடுத்து, விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மதுரை என்றாலே அன்பும் பாசமும் நிறைந்தது. தமிழ்நாட்டில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான். உள்ளாட்சி தேர்தலில் 100 விழுக்காடு வெற்றி.