மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக செயல்பாடு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு, இலவச டயாலிசிஸ் பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவிற்கு புதிய டயாலிஸிஸ் இயந்திரத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இயக்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் மாணிக்கம், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்ல பாண்டி, அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அமைச்சர், 'மக்கள் நல்வாழ்வுக்கான ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் இந்த மருத்துவமனைக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு கருவிகள் இரண்டு வழங்கப்பட்டுள்ளன' என்றார்.
அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மேலும், 30 கிமீ இடைவெளியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவி உள்ள அரசு நமது புரட்சி தலைவி அம்மாவின் அரசு தான்' என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் முற்றுகை போராட்டம்