தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சதுரகிரி மலையில் இளைஞரை கொலை செய்த இருவர் நீதிமன்றத்தில் சரண் - கொலை செய்த வழக்கு

மதுரை: சதுரகிரி மலையில் நண்பனை தள்ளி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

court

By

Published : Aug 6, 2019, 6:26 AM IST

மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(19). இவர் தனது நண்பர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது மலையில் அவர்கள் நடந்து சென்றபோது ராம்குமார் மலையில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். இது குறித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் ராம்குமாரின் நண்பர்கள் தள்ளிவிட்டதால் தான் அவர் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, ராம்குமாரின் நண்பர்களை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய மதுரை தத்தனேரியைச் சேர்ந்த வினோத்குமார் (19), செல்லூரைச் சேர்ந்த சரவணன் (19) ஆகிய இருவரும் மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதேவி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details