மதுரை: தேசிய நெடுஞ்சாலையில் செட்டியபட்டியிலிருந்து ஷேர் ஆட்டோ உசிலம்பட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது மாதரை கிராமம் அருகே ஆட்களை ஏற்றுவதற்காக ஷேர் ஆட்டோ மெதுவாகச் சென்றது. அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம், ஷேர் ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
ஷேர் ஆட்டோ மீது மோதிய இருசக்கர வாகனம்: இருவர் காயம்
உசிலம்பட்டி நோக்கிச் சென்ற ஷேர் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஷேர் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய சிசிடிவி காட்சியை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:மதுரை மருத்துவமனையிலிருந்து கைதி தப்பி ஓட்டம் - காவலர்கள் பணியிடை நீக்கம்