மதுரை:மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரின் மகன் கோபு (49) முன்னாள் கவுன்சிலராக இருந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் புண்ணியமூர்த்தி (50) என்பவரும் மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.
நேற்றிரவு வேலையை முடித்து விட்டு மதுரையில் இருந்து நாகமலை புதுக்கோட்டை வழியாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில், முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.