கரோனா வைரஸ் தொற்று காரணமாக, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று மாவட்டத்தில் புதிதாக 263 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,858ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 677 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 3,043 பேர் சிகிச்சையில் பெற்றுவருகின்றனர். நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் 263 பேருக்கு கரோனா பாதிப்பு - Corona virus
மதுரை மாவட்டத்தில் இன்று(ஜூலை 17) புதிதாக 263 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மதுரை மருத்துவமனை
கடந்த இரு நாள்களாக, மதுரை மாவட்டத்தில் வைரஸ் தொற்றுப் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளதால், மெல்ல மெல்ல மதுரை மாநகரம் மீண்டெழுந்து வருகிறது.