மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் ஐந்து பேருக்கு நேற்றைய தினம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்கள் சென்னையில் இருந்து மதுரை மத்திய சிறைச்சாலைக்கு ஆயுள் தண்டனை கைதிகளாக நேற்று காலை அழைத்து வரப்பட்டனர்.
மதுரையில் இரண்டு கைதிகளுக்கு கரோனா தொற்று - மதுரை மத்திய சிறை
மதுரை: மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை
அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் நேற்றைய தினம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை முடிவில் இரண்டு கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.