மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். இவரது உறவினர் காசிமாயன். இருவரும் வெள்ளக்கல் சாலையில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, எதிரே அதிவேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்களின் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கட்டுப்பாட்டை இழந்த கார், அருகே இருந்த வயல்வெளியில் விழுந்து கவிழ்ந்தது.