மதுரை மாடக்குளம் பெரியார் குறுக்குத் தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருபவர் செல்வம்(62). ரயில்வே துறையில் டெக்னீசியனாக வேலை செய்து ஓய்வு பெற்ற இவர், மாடக்குளம் மெயின் ரோட்டில் அதிகாலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.
அதன்படி, இன்றும் (ஆகஸ்ட் 14) நடைபயிற்சி செய்த அவரை அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளனர். அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதியருகே அவர் நடந்து சென்றபோது, கத்தியால் அவரின் தலையில் வெட்டிவிட்டு அவரிடமிருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்றனர்.