மதுரையை சேர்ந்த 15 வயது சிறுமி, தந்தை இறந்த நிலையில், தாயுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே சிறுமியை அவரது தாயார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியிடம் விசாரணை செய்தனர். அதில், சிறுமியின் வீட்டின் அருகே இருக்கும் முதியவர், இவரை மிடட்டி பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளார்.