விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சீனாவிலிருந்து தமிழ்நாடு திரும்பி 16 நாள்களே ஆகியுள்ளன. அதேபோன்று சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கடந்த பத்து நாள்களுக்கு முன்பாக ஊர் திரும்பியுள்ளார். இருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக நேற்று இரவு மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் அறிகுறி - மதுரை இராசாசி மருத்துவமனையில் இருவர் அனுமதி! - கொரோனா அறிகுறிகள்
மதுரை: இராசாசி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளோடு விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இருவர் சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் அறிகுறி - மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் இருவர் அனுமதி
இந்நிலையில் இருவரும் கொரோனா வைரஸ் சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, பிரத்யேக ஆடைகளுடன் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்த மருத்துவர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இதனையடுத்து கொரோனா வைரஸ் சிறப்புச் சிகிச்சைப் பிரிவு உள்ள பகுதிகளில் பொதுமக்களோ அல்லது நோயாளியின் உறவினர்களோ நடமாட மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்துள்ளது.