மதுரை மாவட்டம் கூடல்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மதுரையில் கஞ்சா கடத்திய இருவர் கைது!
மதுரை: இருசக்கர வாகனத்தில் சட்டத்திற்கு புறம்பாக, கஞ்சா கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிக்கந்தர் சாவடி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது சிக்கந்தர் சாவடியை சேர்ந்த குபேந்திரன் மற்றும் பாலமுருகன் என்ற இருவரும் கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா, ரூ.2500 பணம் மற்றும் இருசக்கர வாகனம் என அனைத்தையும் பறிமுதல் செய்த கூடல்புதூர் காவல்துறையினர், அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.