மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வசித்து வந்த கருப்பு பிள்ளை எனும் முதியவர் (84) நேற்று (மே.11) இயற்கை எய்தினார். இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள உறவினர்கள் இன்று (மே.12) வந்திருந்தனர். அப்போது இறுதி சடங்கு நிகழ்ச்சியின் ஒரு பகுதியான நீர் மாலை குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதற்காக சாலை அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் நீர் எடுப்பதற்காக பெண்கள் அனைவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென இறுதி சடங்கு கூட்டத்துக்குள் புகுந்து மூன்று பெண்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பொன் மலர் (40), ராணி (40) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.