மதுரை: மாநகருக்குட்பட்ட வில்லாபுரம் மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளில் சிற்ப சாஸ்திர பயிற்றுநர் தேவி அறிவு செல்வம் ஆய்வு செய்தபோது சதி கற்களை கண்டறிந்தார்.
வில்லாபுரம் நடுகல் இருப்பிடம்:
தெற்கு வாசல் வில்லாபுரம் பகுதியை இணைக்கும் பாலத்தின் இடது பக்கம் சாலை ஓரத்தில் மூன்றடி உயர முக்கோண பலகை கல்லில் ஆண் பெண் உருவங்கள் இருக்கின்றன. இருவரும் ஏத்தி இறுக்கி கட்டிய பக்கவாட்டு கொண்டை அணிந்துள்ளனர் என தேவி அறிவு செல்வம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இருவரும் சுகாசனத்தில் உள்ளனர். வில்லாபுரம் பகுதி கண்மாயாக இருந்த பொழுது காத்த வீரருக்காக எடுக்கப்பட்ட நடுகல் என இதனை கருதலாம். கண்மாய்க் கட்டடமாக மாறும்பொழுது கண் மை கரையின் ஓரத்தில் இருந்த இந்த நடுகல்லானது கட்டடமாக மாறும்பொழுது சாலையின் ஓரத்தில் இப்பொழுது எடுத்து வைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது என தெரிவித்தார்.