மதுரை மாவட்டத்தில் இதுவரை 495 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அம்மாவட்ட அரசு இராசாசி மருத்துவமனை உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா: மதுரையில் குணமடைந்து வீடு திரும்பிய 20 பேர்! - மதுரை மாவட்ட செய்திகள்
மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில், இன்று 20 பேர் குணமடைந்துள்ளனர்.
மதுரை மருத்துவமனை
இந்நிலையில் இன்று மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 20 பேர் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 330 பேர் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மதுரையில் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.