திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், "சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஆளுங்கட்சியினர் திருச்சி மாநகர் முழுவதும் பேனர்களை வைத்துள்ளனர். பேனர்களை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், எவ்வித அனுமதியின்றி ஆளுங்கட்சியினர் திருச்சி மாநகர் முழுவதும் பேனர்களை வைத்துள்ளனர்.
தற்போது, தமிழ்நாட்டில் காற்று வேகமாக வீசத் தொடங்கியுள்ளது. இதனால், சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. இது தொடர்பாக அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, திருச்சி மாநகர் பகுதி முழுவதும் சட்டவிரோதமாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.