தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில் சொத்துக்கள் மீட்கும் வழக்கு: அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு! - madurai high court bench

மதுரை: கடந்த 1960இல் திருவிதாங்கூர் தேவம்சம் போர்டு, கன்னியாகுமரி, செங்கோட்டை பகுதிகளில் உள்ள கோவில்களுக்குத் தானமாக வழங்கிய பத்திரங்கள், சொத்து விபரங்கள் அடங்கிய ஆவணங்களைப் பத்திரப்படுத்தி மீட்டெடுக்கும் வழக்கில், அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

mdu
mdu

By

Published : Aug 4, 2020, 10:26 PM IST

கன்னியாகுமரியைச் சேர்ந்த பெரிய நம்பி நரசிம்ம கோபாலன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அந்த மனுவில், "ஆரம்ப காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிதாங்கர் தேவம்சம் போர்டு கட்டுப்பாட்டில் இருந்தது.

அச்சமயத்தில், கடந்த 1960ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் தேவம்சம் போர்டு கன்னியாகுமரி, செங்கோட்டை கோயில்களுக்குப் பல்வேறு நிலங்களை தானமாக வழங்கி அதற்கான ஆவணங்களை வழங்கியது. பின்னர், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாட்டில் இணைக்கப்பட்ட பிறகு இந்த கோவில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, கோவில் சொத்துகளை மீட்டெடுக்கும் வகையில், கடந்த 1960ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் தேவம்சம் போர்டு சார்பில் கன்னியாகுமரி, செங்கோட்டை கோவில்களுக்குத் தானமாக வழங்கிய. பத்திரங்கள், சொத்து விபரங்களை அடங்கிய ஆவணங்களை கணினி மயமாக்கி டிஜிட்டலாக பத்திரப்படுத்தி சொத்துக்களை மீட்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதி ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details