மதுரை மாவட்டத்தில் திருநங்கைகள் 15-க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இணையத்தில் முன்பதிவு செய்தும், திருநங்கைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நான்கு காளைகளுக்கு மட்டும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இந்த ஆண்டு மதுரையில் பொங்கலை முன்னிட்டு நடைபெறவுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொன்றிலும் தலா மூன்று வீதம் அனுமதி வழங்கக் கோரி இன்று (ஜன.11) 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.