தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவக ஊழியரைக் கொன்ற திருநங்கை - காவல் துறை விசாரணையில் வாக்குமூலம் - மாட்டுத்தாவணி

மதுரை: மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே படுகொலைசெய்யப்பட்ட உணவக ஊழியரை திருநங்கை ஒருவர், தான் கொன்றதாக காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Transgender Raisa
Transgender killed hotel employee

By

Published : Dec 11, 2020, 12:16 PM IST

மதுரை மாட்டுத்தாவணி அருகே முள்புதரில் சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பாக கொலைசெய்யப்பட்ட நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து மதுரை அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் ஆய்வுமேற்கொண்டனர். அப்போது மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த ரைசா என்ற திருநங்கையை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

உணவகத்தில் பணிபுரிந்த மதியழகன், திருநங்கை ரைசாவை அழைத்துச் சென்று தனிமையில் இருந்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் திருநங்கை ரைசா மதியழகனைத் தள்ளிவிட்டு கட்டையால் தாக்கியதில் உயிரிழந்ததாக காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருநங்கை ரைசாவை காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்திய நிலையில், ரைசா அறுவை சிகிச்சை செய்யாத நிலையில் பாலினம் குறித்து உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details