தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

MICHAUNG புயல் எதிரொலி: சென்னை - தென் மாவட்டங்கள் - சென்னை ரயில் சேவைகள் ரத்து! - trains have been cancelled from south districts

வங்கக்கடலில் நிலவிவரும் 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 5:25 PM IST

Updated : Dec 4, 2023, 10:11 PM IST

சென்னை:வங்கக்கடலில் நிலவிவரும் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளநீரை வெளியேற்றும் பணியை தமிழ்நாடு அரசு தொடர்ந்து துரிதப்படுத்தி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, தென் மாவாட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "சென்னையில் நிலவி வரும் புயல், மழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி டிசம்பர் 4 அன்று புறப்பட வேண்டிய,

  • நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658)
  • மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638)
  • செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662)
  • நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692)
  • கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636)
  • கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் (12634)
  • மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684)
  • திருநெல்வேலி - சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (12632)
  • தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694)
  • விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (22662)
  • தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16752)
  • திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606)
  • மதுரை - டெல்லி நிஜாமுதீன் தமிழ்நாடு சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் (12651)
  • குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் (16128) ஆகிய ரயிலகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன" என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல் சென்னையில் இருந்து புறப்படும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் நிலவும் புயல் மழை காரணமாக திங்கட்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605), செங்கோட்டை வழி செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101), கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633), விருத்தாச்சலம் வழி வரும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (22661), தஞ்சாவூர் வழி வரும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16751) ஆகிய ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:சென்னையை புரட்டிப்போடும் மிக்ஜாம் புயல்; இன்று இரவு வரை கனமழை தொடரும் என எச்சரிக்கை!

Last Updated : Dec 4, 2023, 10:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details