தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு..! - etv bharat news in tamil

Southern Railway: தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் ரயில்வே அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Train Cancel
Train Cancel

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 10:37 PM IST

மதுரை: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மழை வெள்ளம் காரணமாக ரயில் பாதையில் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல ரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி - செங்கோட்டை பிரிவில் இரு மார்க்கத்திலும், திங்கட்கிழமை அன்று இயக்கப்பட வேண்டிய முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 18ஆம் தேதி அன்று திருநெல்வேலியிலிருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ணவி கட்ரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மறு மார்க்கத்தில், டிசம்பர் 21ஆம் தேதி அன்று ஸ்ரீ வைஷ்ணவி கட்ரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் டிசம்பர் 18ஆம் தேதி அன்று இயக்கப்பட வேண்டிய திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - திருச்சி இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ‌மேலும், டிசம்பர் 18 அன்று நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும். நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - பெங்களூர் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - தாதர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் டிசம்பர் 18 அன்று மதுரையிலிருந்து இயக்கப்படுகிறது.

நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்பட்டது. கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் இருந்து இயக்கப்படும். திருநெல்வேலி - ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்பட்டது.

மேலும், திருநெல்வேலி, மானாமதுரை, பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட வேண்டிய செங்கோட்டை - தாம்பரம் ரயில் ராஜபாளையம், விருதுநகர், மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:கனமழையால் பாதித்தவர்களுக்கு விரைந்து நிவாரணம் அளிக்க இபிஎஸ் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details