மதுரை: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலின் (16848) பயண நேரத்தைக் குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி நவம்பர் 19 முதல் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே நண்பகல் 12.10, 12.42, 12.53, 13.45 மணிக்குப் பதிலாக நண்பகல் 11.30, 12.02, 12.13, 13.20 மணிக்குப் புறப்படும்.