மதுரை சோலைஅழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி. ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த மாதம் 15ஆம் தேதி தேனிக்கு சென்றுவிட்டு உசிலம்பட்டி வழியாக மதுரை வந்து கொண்டிருந்தபோது, தேவர்சிலை அருகே வாகன தணிக்கையில் இருந்த போக்குவரத்து காவல் துறையினர் இவரது ஷேர் ஆட்டோவை வழிமறித்து சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சோதனையில் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்த சூழலில் இவரது வாகன எண்ணைக் குறித்துவிட்டு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்றதும் உசிலம்பட்டி போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அபராதத் தொகையைச் செலுத்த மறந்த காந்தி நேற்று (அக்.,25) அபராதம் செலுத்துவதற்காக மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள ஒரு கணினி மையத்திற்கு சென்றார். அபராதம் செலுத்த முயன்ற போதுதான் ஏன் அபராதம் விதித்தனர் என்பதை தெரிந்து கொண்டார்.