தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊதிய உயர்வு விவகாரம் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: அரசுப் போக்குவரத்துக் கழக கண்காணிப்பாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்துசெய்யக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai highcourt
madurai highcourt

By

Published : Feb 24, 2020, 8:03 PM IST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சம்பத், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.

அதில், "தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொழிலாளர்களுக்கு கண்காணிப்பாளர், பொறியாளர்கள் முதல் மேலாண் இயக்குநர் வரையுள்ளவர்களுக்கு அரசு ஊதியக் குழு பரிந்துரைகளின்படி ஊதிய நிர்ணயம் செய்யப்படுகிறது. தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல் 2.44 மடங்கு அடிப்படையில் ஊதிய நிர்ணயம்செய்து 2018 அக்டோபர் 31இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த அரசாணை நிதித் துறை அரசாணை, போக்குவரத்துத் துறை அரசாணைகளுக்கு முரணாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பாளர்கள் பலருக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு இந்த அடிப்படையில் ஊதிய உயர்வு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே அரசுப் போக்குவரத்துக் கழக கண்காணிப்பாளர்களுக்கான ஊதிய உயர்வு நிர்ணயம் தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும். எனக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் மறு நிர்ணயம்செய்து பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்"எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் பார்க்க: உலக காதல் சின்னத்தை தனது இணையுடன் கண்டு ரசித்த ட்ரம்ப்!

ABOUT THE AUTHOR

...view details