மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டிஎன்பிஎஸ்சி தேர்வில் சில இடங்களில் மட்டுமே முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை அளித்திருப்பதை மக்களால் நம்பமுடியாது. அரசன் எவ்வழியோ அவ்வழியிலேயே முறைகேடும் நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி கம்பெனி போல நடக்கிறது” என விமர்சித்தார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்! - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
மதுரை: முறைகேடு நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
TNPSC to hold red-contact - TTV Dinakaran
மேலும், ஏற்கனவே நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என்றும், தஞ்சை பெரிய கோயிலில் இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.
இதையும் படிங்க...பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!