தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப் 4 முறைகேடு: ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கக் கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு! - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

மதுரை: 2019ஆம் ஆண்டு குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கக் கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

By

Published : Feb 25, 2021, 3:25 PM IST

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வை மாநிலம் முழுவதும் 16 லட்சம் பேர் எழுதினர்.

இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றது தெரியவந்தது.

இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். சிபிஐ விசாரித்தால்தான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும்.

எனவே குரூப் 4 முறைகேட்டில் அனைத்து உண்மைகளையும் கண்டறியவும், சிபிசிஐடி காவல் துறையினரின் வசமுள்ள வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வு, குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கவும், அதுதொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: வழக்கறிஞர் கொலை வழக்கு - மனைவி உள்பட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை

ABOUT THE AUTHOR

...view details