மதுரை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி 1ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களை மட்டும்தான் 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் தேர்வு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்ட குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தத் தேர்வில் மட்டும் 1ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களை 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. எனவே விலக்கு அளிக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.