தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 16, 2022, 10:51 AM IST

ETV Bharat / state

TNPSC குரூப் 1 தேர்வு...தமிழில் எழுதப்பட்ட தேர்வுத் தாள் மதிப்பிடும் பணி தொடர்பான வழக்கு

TNPSC குரூப் 1 தேர்வில் தமிழில் எழுதப்பட்ட முதன்மைத் தேர்வுத் தாள் மதிப்பிடும் பணியை திறமையான மதிப்பீட்டாளர்களுக்கு மட்டுமே வழங்குவது உறுதி செய்யப்படும் என நம்புவதாக மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

TNPSC குரூப்
TNPSC குரூப்

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.சக்தி ராவ், என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ’குரூப் 1 தேர்வின் முதன்மை தேர்வை தமிழில் மொழியில் எழுதும் தேர்வு விடைத்தாள்களை, 1 ஆம் வகுப்பு முதல் பட்டம் வரை தமிழ் வழிக் கல்வியை தமிழ் வழியில் படித்த நபர்கள் தான் மதிப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி, சுவாமி நாதன் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழ் வழித் தேர்வர்கள் எழுதும் தாள்களை 1 ஆம் வகுப்பு முதல் பட்டம் வரை தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்று மனுதாரர் கூறி உள்ளார். இந்த விஷயத்தின் மனுதாரருக்கு உரிய நிவாரணம் வழங்க இயலாது.

TNPSC ஒரு ஆட்சேர்ப்பு நிறுவனமாக இருப்பதால், பணியை வழங்குவதற்கு முன், எந்தவொரு மதிப்பீட்டாளரின் திறனைப் பற்றியும் நிச்சயமாகத் திருப்தியடைந்திருக்கும். 1 ஆம் வகுப்பு முதல் பட்டம் வரை தமிழ் வழியில் படித்த ஒருவர் மட்டுமே தமிழில் விடைத்தாள்களை மதிப்பிடும் தகுதி உடையவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஆங்கில வழி கல்வியில் படித்த ஒருவர் தமிழராக இருந்தாலும் சரி, சரியாக மதிப்பிடும் திறன் பெற்றிருக்கலாம். இவை அனைத்தும் மதிப்பீட்டாளர் சார்ந்தவை. டிஎன்பிஎஸ்சி மனுதாரரின் கோரிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதன்மைத் தேர்வுத் தாள்களை மதிப்பிடும் பணியை திறமையான மதிப்பீட்டாளர்களுக்கு மட்டுமே வழங்குவதை உறுதி செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்ற அறிவுத்தலுடன் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஊழல்: ஈபிஎஸ்ஸுக்கு எதிராக விசாரிக்க அரசிடம் அனுமதி கேட்பு - லஞ்ச ஒழிப்புத்துறை

ABOUT THE AUTHOR

...view details