தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஒழிக்கப்படும்!

மதுரை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் அனைத்தும் முழுமையாக ஒழிக்கப்படும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

'குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஒழிக்கப்படும்
'குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஒழிக்கப்படும்

By

Published : Jul 7, 2021, 9:11 AM IST

Updated : Jul 7, 2021, 10:31 AM IST

மதுரை: அண்மையில் காப்பகத்தில் நடைபெற்ற குழந்தை விற்பனை, குழந்தைகளுக்கு எதிரான சிக்கல்கள் குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ராமராஜ் நேற்று (ஜூலை 6) ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.

குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைப்பு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரோனா காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்றாம் அலையின் போது குழந்தைகளுக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் தேவையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குழந்தை விற்பனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் எனவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. இதற்காக மதுரையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தை பாதுகாப்பில் மதுரை மாவட்டத்தை முன்மாதிரியான மாவட்டமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பொதுமக்கள் உதவ வேண்டும்

மேலும் அவர், "கிராமம் முதல் நகரம், பேரூராட்சி எனப் பல்வேறு கட்டங்களாக குழுக்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். குழந்தை பாதுகாப்பில் அரசு மட்டுமல்ல பொது மக்களின் பங்கு மிகவும் அவசியம்.

மதுரை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முழுமையாக ஒழிக்கப்படும் என உறுதி அளிக்கிறேன். 1098 அழைத்தால் ஒரு மணி நேரத்தில் குழந்தைகள் மீட்கப்படுவர்.

குற்றவாளிகளை முன்னரே கண்டறிய பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும். கிராம அளவில் குழுக்கள் அமைத்து புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குழந்தைகளைத் தத்தெடுப்பதில் சிரமங்கள் இல்லை.

அதற்கான விதிமுறைகள் கடுமையாக இருக்கும், இல்லையென்றால் குழந்தைகள் மீதான குற்றச் செயல்கள் அதிகரித்து விடும். இதன் காரணமாகவே ஒன்றிய அரசு கடுமையான சட்டங்களை வகுத்துள்ளது. எளிமையாக திருத்தம் செய்ய மாநில அளவில் பரிந்துரை செய்யப்படும்" என்று கூறினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களை ஆய்வுசெய்ய உத்தரவு

Last Updated : Jul 7, 2021, 10:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details