திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நித்திய சௌமியா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தமிழ்நாட்டில் 3305 கிலோ மீட்டர் காடுகள் உள்ளது. இந்தக் காடுகளில் பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. தற்போது தமிழ்நாடு காடுகளில் வாழும் உயிரினங்கள் பல், தந்தம்,ஓடு போன்றவைகளுக்காக வேட்டையாடப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
உலகளவில், சட்ட விரோதமாக விலங்குகளின் பொருளுக்காக நடைபெறும் கடத்தல்கள் அதிகமாக இந்தியா வழியாகவே நடைபெறுகிறது. இதற்கு இந்தியாவில் சட்டங்கள் கடுமையாக இல்லாததே காரணம். இந்தியாவில் 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை 3 ஆயிரம் எறும்பு தின்னிகள் ஓடுகளுக்காக கொல்லப்பட்டுள்ளன. 25 கடத்தல்காரர்களிடம் இருந்து 5 ஆயிரம் கிலோ ஓடுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. எறும்பு தின்னிகள் பாதுகாக்கப்பட உயிரினங்களில் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.
மருத்துவ பயன்பாட்டிற்காக ஏறும்பு திண்ணியின் ஓடுகள் அதிகப்படியாக சீனா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. காடுகளில் உள்ள அரிய வகை மரங்களானம் சந்தனம், தேக்கு போன்றவை சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. காடுகளின் உள்ளே கஞ்சா செடிகள் வளர்த்து கடத்தப்படுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2021 ஜனவரி 5ஆம் தேதி 5.75 கிலோ எடையுள்ள எறும்பு தின்னி ஓடுகள், 6 சிறுத்தை நகங்கள், 6 கிலோ 2 யானையின் தந்தங்கள் ஆகியவை வனத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.