மதுரையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி செல்சியசுக்கு மேலாக கோடை வெப்பம் கடுமையாய் சுட்டெரித்து வருகிறது. மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்த நிலையில் மதுரை நகருக்குள் மழை பெய்யாமல் வஞ்சித்து வந்தது.
மதுரையை குளிர்வித்த திடீர் கோடை மழை! - மதுரை நகர்
மதுரை: மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை பெய்த திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Rain
மதுரை நகரில் நேற்றும் வழக்கம் போல் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக மாலை ஏழு முப்பது மணி அளவில் கடும் மழை பெய்யத் தொடங்கியது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளின் ஓரத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
Last Updated : Apr 30, 2019, 9:48 AM IST