மதுரை கோச்சடை அருகே முடக்கு சாலை சந்திப்பில் வைகை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சாலை முழுவதும் நிறைந்த ஓடிய இந்த தண்ணீரால் வாகன ஓட்டிகள் மிகக்கடுமையாக பாதிப்புக்கு ஆளாகினர்.
கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து வீணான வைகை நீர்! - vaigai
மதுரை: வைகை கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்ததில் பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகியுள்ளது.
வைகை
தற்போது மதுரையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடி வரும் நிலையில் இதுபோன்று குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பான தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.