மதுரை மாவட்டம், விளாச்சேரி கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மத்திய அரசு வழங்கும் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பியே உள்ளனர். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகள் ஆண்டிற்கு 20 நாட்கள் கூட வேலை வழங்குவதில்லை எனவும், இதனால் குடும்பத்தின் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நூறுநாள் வேலை திட்ட நிதிகளை அதிகாரிகள் கையாடல் செய்வதாக புகார் - 100 days wrok
மதுரை: மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய வேலை ஆண்டிற்கு 20 நாட்கள் கூட வழங்குவதில்லை என விளாச்சேரி பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிராம மக்கள் குற்றச்சாட்டு
மேலும் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு என அரசு ஒதுக்கும் நிதியை, சில அரசு அதிகாரிகள் வேலை கொடுக்காமல் கையாடல் செய்து வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நூறு நாட்களும் முழுமையாக வேலை கொடுக்க வேண்டும் எனவும், கோரிக்கை வைத்துள்ளனர்.