மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை! - water crisis
மதுரை: தொடர் மழை வேண்டி மதுரை மகபூப்பாளையம் பள்ளிவாசலில் சுன்னத் வல் ஜமாத் சார்பாக நோன்புடன் கூடிய சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
PRAYER
மதுரை மகபூப்பாளையம் சுன்னத் வல் ஜமாத் சார்பாக பள்ளிவாசலில் உலக நன்மை வேண்டியும் தொடர் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஹாஜத் நபில் நோன்புடன் கூடிய சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நோன்பு விரதம் இருந்து மழை வேண்டி உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு தொழுகை நடத்தினர்.